பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு வசதி கமிஷனர் எச்சரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'மழைநீர் சேகரிப்பு வசதி செயல்படாமல் இருக்கும் வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது: மாநகராட்சியின் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தும்

திண்டுக்கல் : 'மழைநீர் சேகரிப்பு வசதி செயல்படாமல் இருக்கும் வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மாநகராட்சியின் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தும் செயல்படாமல் இருந்தால் அதனை செயல்பட வைக்க வேண்டும். அரசு, தனியார் கட்டடங்கள், தொழிற்சாலைகளில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக ஆய்வு செய்ய மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக வர உள்ளனர். மழைநீர் சேகரிப்பு வசதி செயல்படாமல் இருக்கும் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X