100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கொடைக்கானல், அம்மாபட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கொடைக்கானல், அம்மாபட்டி

Added : செப் 04, 2021
Share
திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் அம்மாபட்டி ஊராட்சி, கொடைக்கானல் நகராட்சியில் நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு 10 க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 9.15 லட்சம் பேர்
 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கொடைக்கானல், அம்மாபட்டி

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் அம்மாபட்டி ஊராட்சி, கொடைக்கானல் நகராட்சியில் நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு 10 க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 9.15 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திஉள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பழநி, கொடைக்கானல் நகராட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் கொடைக்கானல் 100 சதவீதம் (முதல் டோஸ்) தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக மாறியுள்ளது.

பழநி நகராட்சியில் 99.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் முதல் முறையாக 100 சதவீதம் (முதல் டோஸ்) தடுப்பூசி செலுத்திய ஊராட்சியாக வேடசந்துார் அருகே அம்மாபட்டி மாறியுள்ளது. மற்ற ஊராட்சிகளையும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய ஊராட்சியாக மாற்ற கிராமப்புறங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X