கேரளாவில் கொரோனாவால் நேற்று 29,322 பேர் பாதிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 29,322 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,63,691 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,322 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 17.91ஆக இருந்தது. 22,938 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப் பட்டனர். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 131பேர் இறந்ததால் பலிஎண்ணிக்கை 21,280ஆக அதிகரித்தது.தற்போது மருத்துவமனைகளில் 2,46,437 பேர்

மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 29,322 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,63,691 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,322 பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு சதவீதம் 17.91ஆக இருந்தது. 22,938 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப் பட்டனர். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 131பேர் இறந்ததால் பலிஎண்ணிக்கை 21,280ஆக அதிகரித்தது.தற்போது மருத்துவமனைகளில் 2,46,437 பேர் சிகிச்சையிலும், 5,78,704 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

திருச்சூர் மாவட்டத்தில் 3530 பேர்,

எர்ணாகுளம் 3435,

கோழிகோடு 3344,

கொல்லம் 2957,

மலப்புரம் 2736,

பாலக்காடு 2545,

ஆலப்புழா 2086,

திருவனந்தபுரம் 1878,

கோட்டயம் 1805,

கண்ணுார் 1490,

பத்தனம்திட்டா 1078,

வயநாடு 1003,

இடுக்கி 961,

காசர்கோடு 474 பேர் பாதிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X