பொது செய்தி

இந்தியா

பிரதமர் வீட்டுத் தோட்டத்தில் கேரள மாணவியின் செடி

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருவனந்தபுரம்-கேரள பள்ளி மாணவி பரிசாக அளித்த, இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கொய்யா செடி, பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டு தோட்டத்தில் வளர உள்ளது.கேரளாவில் பத்தினம்திட்டாவின் குலநாடா பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இயற்கை முறை தோட்டக்கலையில் ஆர்வமுடையவர். இவரது வீட்டு தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் வளர்த்ததற்காக

திருவனந்தபுரம்-கேரள பள்ளி மாணவி பரிசாக அளித்த, இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கொய்யா செடி, பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டு தோட்டத்தில் வளர உள்ளது.



latest tamil news


கேரளாவில் பத்தினம்திட்டாவின் குலநாடா பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இயற்கை முறை தோட்டக்கலையில் ஆர்வமுடையவர். இவரது வீட்டு தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் வளர்த்ததற்காக மாநில அரசின் சிறந்த மாணவிக்கான விருதை பெற்றார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான சுரேஷ் கோபியிடம் கொய்யா செடி ஒன்றை அளித்தார். இதை, பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கும்படி அந்த மாணவி தெரிவித்தார்.


latest tamil news


பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் டில்லியில் சந்தித்த சுரேஷ் கோபி, மாணவி அளித்த கொய்யா செடியை பிரதமரிடம் ஒப்படைத்தார்.அந்த செடியை தன் வீட்டுத் தோட்டத்தில் நிச்சயம் வளர்ப்பதாக, பிரதமர் உறுதி அளித்ததாக, சமூக வலைதளத்தில் சுரேஷ் கோபி பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-செப்-202122:07:06 IST Report Abuse
Vittal anand rao. கேரள மாணவியா பலே பலே
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
04-செப்-202112:26:06 IST Report Abuse
Nagar அவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு செலவுகள் - அவரது போக்குவரத்து செலவுகள் - இது ரெண்டையும் தவிர்த்தால் - மோதி அவர்களின் வாழ்க்கை தரம் இந்தியாவின் சராசரி மனிதனின் வாழ்க்கைதரனுக்கு சமம் ஆகும். மோதி அவர்களின் மொத்த சொத்து மதிப்பு இரண்டு கோடிக்கும் கீழ் தான். அந்த இரண்டு கோடி அவரது பூர்வீக வீட்டு மதிப்புதான். எந்த அரசியல் வாதிக்கவாது சந்தேகம் இருந்தால் மோதி அவர்களின் பினாமி சொத்து இருந்தால் அதை அடையாளம் காண்பித்து கைப்பற்றட்டும்
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
04-செப்-202110:07:53 IST Report Abuse
Believe in one and only God பாருப்பா பிரதமரை எந்த கவலையும் இல்லாம ஜாலியா யிருக்காரு. நம் முதலமைச்சர் எவ்வளவு உழைக்கிறார்
Rate this:
04-செப்-202122:09:45 IST Report Abuse
Vittal anand rao.அவர் நாட்டுக்கு இவர் வீட்டுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X