சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலுார், நாமக்கல்லில் 5 மாணவியருக்கு தொற்று

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:அரியலுார், நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி மாணவியர் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் 1ம் தேதி திறக்கப்பட்டு, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரியலுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.மாணவிக்கு கொரோனா தொற்று
 அரியலுார், நாமக்கல்லில் 5 மாணவியருக்கு தொற்று

பெரம்பலுார்:அரியலுார், நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி மாணவியர் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் 1ம் தேதி திறக்கப்பட்டு, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரியலுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், அரியலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கலெக்டர் ரமண சரஸ்வதி பள்ளியில் ஆய்வு செய்தார்.


பரிசோதனை



இதேபோல, ஆண்டிமடம் அடுத்த வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாணவி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.l நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் முடிவு வெளியானதில், 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மாணவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். மாணவி படித்த வகுப்பறை பூட்டப்பட்டு, சக மாணவர்கள் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். மாணவர்களுக்கு, நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதேபோல, பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியர் இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருவருக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.


2 ஆசிரியை பாதிப்பு

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17ல் தனியார் பள்ளி உள்ளது. இங்கு பணி புரியும் ஆசிரியைகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று காலை தெரிந்தது. இருவரும் என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருமே இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். பள்ளி திறந்து மூன்று நாட்களே ஆன நிலையில், ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று பாதித்தது, பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளியில் ஆய்வு



கடலுார் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் பள்ளிக்கு வந்திருந்த ஒரு இடைநிலை ஆசிரியைக்கு, நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்று காலை மருத்துவக் குழுவினர் பள்ளியில் முகாமிட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களின் பட்டியலை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட ஆசிரியை இருந்த அறை பூட்டப்பட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

நகராட்சி சார்பில் வகுப்பறைகள் உட்பட பள்ளி முழுதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதித்த ஆசிரியையுடன் இருந்த ஆசிரியைகளுக்கும் பரிசோதனை செய்தனர். பின், பள்ளி வழக்கம் போல் இயங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X