பொது செய்தி

தமிழ்நாடு

தசைநார் சிதைவு நோய் குழந்தைக்கு நிதி திரட்ட தஞ்சை கலெக்டர் ஏற்பாடு

Added : செப் 04, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான 16 கோடி ரூபாயை, தன்னார்வலர்கள் மூலம் திரட்ட, தஞ்சை கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார். தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை அருகே சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் - எழிலரசி தம்பதி. இவர்களது மகள் பாரதி, 2. சிறுமிக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.இதற்கு 16 கோடி ரூபாய்
 தசைநார் சிதைவு நோய் குழந்தைக்கு நிதி திரட்ட தஞ்சை கலெக்டர் ஏற்பாடு

தஞ்சாவூர்:தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான 16 கோடி ரூபாயை, தன்னார்வலர்கள் மூலம் திரட்ட, தஞ்சை கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை அருகே சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் - எழிலரசி தம்பதி. இவர்களது மகள் பாரதி, 2. சிறுமிக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.இதற்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

நவம்பர் 6ம் தேதி பாரதிக்கு 2 வயது துவங்க உள்ள நிலையில், அக்டோபர் மாதமே சிகிச்சையை துவங்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, பாரதியின் பெற்றோர், ஊசி மருந்து வாங்க தேவையான தொகையை திரட்டும் முயற்சியில் இறங்கினர். தற்போது வரை 2.10 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டத்தில் உள்ள 14 தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து, நிதி திரட்டும் பணியை துவக்கியுள்ளார்.

இதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், தனியாக ஒரு கணக்கும் துவங்கப்பட்டுள்ளது.'இம்மாதம் 30ம் தேதிக்குள்ளாக நிதி செலுத்த விரும்புவோர், கீழே குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் நிதியை செலுத்தலாம்' என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கு விபரம்:
A/c Name: Support Bharathi
A/c Number: 378401000000550
IFSC Code: IOBA0003784
MICR: 613020024

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X