கோவிட் இறப்பு சான்றிதழ்; உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்குவதில் வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது உச்ச நீதிமன்றத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது.கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, கவுரவ் குமார் பன்சால் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடில்லி : கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்குவதில் வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது உச்ச நீதிமன்றத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது.



latest tamil news



கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, கவுரவ் குமார் பன்சால் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'இழப்பீடு தொகையை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்' என, தெரிவித்தது. இழப்பீடு வழங்கும் விவகாரத்துடன் சேர்த்து, இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக வழிகாட்டுதல்களை வகுத்து, அதை ஆறு வாரங்களுக்குள் வெளியிடும்படி ஜூன் மாதம் உத்தரவிட்டது.


latest tamil news


வழிகாட்டுதல்களை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கோரியதை அடுத்து, அதை நீட்டித்து ஆகஸ்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வெளியிடும்படி நீண்ட நாட்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்படாதது அதிருப்தி அளிக்கிறது. வரும் 11ம் தேதியன்று இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
04-செப்-202106:23:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி மோடியின் படம் போடவில்லை என்று பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். 🤡
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X