சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெக்சிகோ பெண் கொலை கணவர் ஜாமினில் தளர்வு

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:மெக்சிகோ பெண் கொலை வழக்கில், முன்னாள் கணவரின் ஜாமின் நிபந்தனையில் மாற்றம் செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவர் கீழமை நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதித்தது.வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள், மார்டின் மான்ட்ரிக் மன்சூர், 48; செசில்லா அகஸ்டா, 36. விருதுநகரில் கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தனர்.கடந்த 2012 ஏப்., 9ல் மன்சூர் தாக்கியதில் செசில்லா

மதுரை:மெக்சிகோ பெண் கொலை வழக்கில், முன்னாள் கணவரின் ஜாமின் நிபந்தனையில் மாற்றம் செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவர் கீழமை நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதித்தது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள், மார்டின் மான்ட்ரிக் மன்சூர், 48; செசில்லா அகஸ்டா, 36. விருதுநகரில் கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தனர்.கடந்த 2012 ஏப்., 9ல் மன்சூர் தாக்கியதில் செசில்லா பலியானார். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மதுரை மகளிர் நீதிமன்றம் 2020 செப்., 11ல் உத்தரவிட்டது.

தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்து ஜூலை 28ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மன்சூர், 'இருநபர் ஜாமின் உத்தரவாதத்தில், ஒருவர் ரத்த சம்பந்தமானவராக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. ரத்த சம்பந்தமானவர்கள் மெக்சிகோவில் உள்ளனர். அவர்கள் இங்கு வர வாய்ப்பில்லை. அந்த நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும்' என மனு செய்தார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு, 'நிபந்தனை மாற்றி அமைக்கப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்தவர்களே ஜாமின் உத்தரவாதம் அளிக்கலாம். மனுதாரர், மதுரை மகளிர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது' என்றது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
04-செப்-202108:58:15 IST Report Abuse
Girija எஸ்கேப் அவ்வளவுதான் சி பி ஐ யில் வேலையில்லாமல் இருக்காக நிறய பேர் என்ற நினைப்பில் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X