கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் கார் ஜப்தி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் கார் ஜப்தி

Added : செப் 04, 2021
Share
மதுரை : மதுரையில் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயற்சி நடந்தது. எல்லீஸ்நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்ட 1981ல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதைய ஆர்.டி.ஒ., நீலக்கல் ஆர்ஜித பணிகளை செய்தார். மாடக்குளத்தை சேர்ந்த 13 பேரின் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டன. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி 13 பேரும்
கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் கார் ஜப்தி

மதுரை : மதுரையில் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயற்சி நடந்தது. எல்லீஸ்நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்ட 1981ல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அப்போதைய ஆர்.டி.ஒ., நீலக்கல் ஆர்ஜித பணிகளை செய்தார். மாடக்குளத்தை சேர்ந்த 13 பேரின் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டன. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி 13 பேரும் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அவர்களுக்கு ரூ.8.70 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வீட்டு வசதி வாரியம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு செய்தனர்.

இழப்பீடு வழங்காததால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம்உத்தரவிட்டது.அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நின்ற காரை ஜப்தி செய்ய நில உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் முயன்றனர். பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் அலுவலக அலுவலர்கள் விரைந்து இழப்பீடு வழங்குவதாக தெரிவித்ததையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X