கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு எஸ்.ஐ., கோரிக்கை தள்ளுபடி

Added : செப் 04, 2021
Share
Advertisement
மதுரை:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ., ரகு கணேஷ், வழக்கு ஆவணங்கள் கோரி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை, போலீசார் 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர்.சாத்தான்குளம்

மதுரை:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ., ரகு கணேஷ், வழக்கு ஆவணங்கள் கோரி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை, போலீசார் 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட ஒன்பது போலீசார் கைது செய்யப்பட்டனர். கொலை மற்றும் பொய் சாட்சியம் உட்பட பல பிரிவுகளில் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

எஸ்.ஐ., ரகு கணேஷ், 'ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அளித்த சிகிச்சைக்குரிய சான்றுகளை வழங்க வேண்டும்.'மேலும், வழக்கின் முக்கிய ஆவணங்களை வழங்க, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்' என உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப், மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X