சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் விபத்தில் பலி சொந்த ஊரில் அடக்கம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:ராணுவ வீரர் பணியின்போது விபத்தில் பலியானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 37. இவர், 21 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது, பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அமுதா, 32.விடுமுறையில் ஊருக்கு வந்த

திருவண்ணாமலை:ராணுவ வீரர் பணியின்போது விபத்தில் பலியானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 37. இவர், 21 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது, பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அமுதா, 32.

விடுமுறையில் ஊருக்கு வந்த ஆறுமுகம் 25 நாட்களுக்கு முன், மனைவி அமுதாவுடன் பஞ்சாப் சென்றார். ஆக., 30-ல், பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானுக்கு ராணுவ வண்டியில் புறப்பட்டு சென்றார்.செப்., 2ல், ராணுவ அதிகாரிகள், குப்பம் கிராமத்தில் உள்ள பெற்றோருக்கு போன் செய்து, ஆறுமுகம் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். ஆறுமுகம் உடல், சொந்த ஊரான குப்பம் கிராமத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் அஞ்சலிக்கு பின், உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X