சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஆடிட்டர் கொலை தேடப்பட்ட இருவர் சரண்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:சென்னை ஆடிட்டர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான், 48; கடந்த 27ல் கிருஷ்ணகிரி வந்தவர் மாயமானார். அவரது மனைவி பூர்ணிமா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், ஆடிட்டர் ஜனரஞ்சனை ஒரு கும்பல் கடத்தி கொன்று, சாமல்பட்டி அருகே மாந்தோப்பில்

கிருஷ்ணகிரி:சென்னை ஆடிட்டர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான், 48; கடந்த 27ல் கிருஷ்ணகிரி வந்தவர் மாயமானார். அவரது மனைவி பூர்ணிமா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், ஆடிட்டர் ஜனரஞ்சனை ஒரு கும்பல் கடத்தி கொன்று, சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்தது தெரிந்தது.

இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார், பெரம்பலுார் சபரீஷ், சாமல்பட்டி வி.சி., கட்சி பிரமுகர், 'ஜிம்' மோகன் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். பண விவகாரத்தில் இக்கொலை நடந்தது தெரிந்தது.

கொலையான ஆடிட்டர் ஜனரஞ்சன், 30 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, சபரீஷிடம் கூறியதாகவும், அதற்காக 3.50 கோடி ரூபாய் கமிஷன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தொகையை சபரீஷ், ஜனரஞ்சனிடம் கொடுத்த நிலையில், கடன் வாங்கி கொடுக்காததால் அவரை கொன்றது தெரிந்தது.

இது தொடர்பாக, ஊத்தங்கரை தாலுகா, சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனியப்பன், 39; விஜி, 29, ஆகியோரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தேடி வந்தனர்.அவர்கள், நேற்று கிருஷ்ணகிரி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் செந்தில்பிரபு முன்னிலையில் சரணடைந்தனர். இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X