சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.8.50 லட்சம் மோசடி பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காங்கேயம்:வீடு கட்டி தருவதாக கூறி 8.50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளித்த புகார்படி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர பா.ஜ., தலைவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.பெங்களூரைச் சேர்ந்தவர் இளங்கோ பிரசாத்; மனைவி சந்தியா, 30. கடந்த 2015 முதல் இளங்கோ பிரசாத், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே, 'பவர் கிரிட் கார்ப்பரேஷன்' கிளையில் டி.ஜி.எம்., ஆக பணிபுரிகிறார். இவர்கள்,

காங்கேயம்:வீடு கட்டி தருவதாக கூறி 8.50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளித்த புகார்படி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர பா.ஜ., தலைவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் இளங்கோ பிரசாத்; மனைவி சந்தியா, 30. கடந்த 2015 முதல் இளங்கோ பிரசாத், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே, 'பவர் கிரிட் கார்ப்பரேஷன்' கிளையில் டி.ஜி.எம்., ஆக பணிபுரிகிறார். இவர்கள், காங்கேயம் பழையகோட்டை ரோடு பகுதியில் வசிக்கின்றனர்.

காங்கேயம் தொட்டியபட்டி தாமரை நகரில், சுகி கலெக் ஷன் என்ற நிறுவன உரிமையாளர் கலா நடராஜன் என்பவர் மூலம் வீடு கட்ட, இரு மனைகளை கிரயம் செய்துள்ளனர். அந்த இடத்தில் வீடு, கோவில் கட்டி தருவதாக, 3.50 லட்சம் ரூபாயை இளங்கோ பிரசாத் வங்கி கணக்கில் இருந்து, கலா நடராஜன் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், ஏழு மாதங்களாக எந்த வேலையும் ஆரம்பிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

மேலும், பாபா சிலை வாங்கி தருவதாக கூறி 2 லட்சம் ரூபாய், கோவில் கட்டுவதற்கு 'பிளான் அப்ரூவல்' ஆகியவற்றை பேசி 3 லட்சம் ரூபாயை சுகி கலெக் ஷன் என்ற பெயரில் கலா நடராஜன் பெற்றுக் கொண்டார். வீடு கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதனால் 8.50 லட்சம் ரூபாயை சந்தியா திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு, 'ஒரு பைசா கூட தர முடியாது' எனக் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது சந்தியா வீடு கட்டும் பணியை துவங்கியுள்ள நிலையில், அங்கு சென்ற கலா நடராஜன், அவரது மகன் ராகுல் கிருஷ்ணா, 22, ஆகியோர் வேலை ஆட்களை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சந்தியா புகார்படி, காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர். கலா நடராஜன், பா.ஜ., காங்கேயம் நகர தலைவராக உள்ளார்.கலா நடராஜன் கூறுகையில், ''இடம் வாங்குவதற்கு தான் பணம் தந்தனர். கொடுத்த பணத்திற்கு இடம் வாங்கி தந்து கிரயம் செய்து தரப்பட்டது. அரசியல் பகைமை, காழ்ப்புணர்சியோடு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே, சிலர் துாண்டுதலில் இதுபோல் செய்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
06-செப்-202113:51:16 IST Report Abuse
suresh kumar எந்த ஒரு ஆவணமும் வைத்துக் கொள்ளாமலா 8.50 லட்சம் தந்திருப்பார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X