சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் புகுந்த நல்ல பாம்பு கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஊழியர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவர். கலெக்டர் அலுவலகத்தில் வேலைக்கு வந்த கொத்தனார் ஒருவர், நேற்று மாலை 6:45 மணியளவில் தனது பைக்கை எடுக்கச்

விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஊழியர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவர். கலெக்டர் அலுவலகத்தில் வேலைக்கு வந்த கொத்தனார் ஒருவர், நேற்று மாலை 6:45 மணியளவில் தனது பைக்கை எடுக்கச் சென்றார்.அப்போது, பைக் பெட்ரோல் டேங்க் கீழே பாம்பு இருப்பது தெரியவந்தது. அங்கிருந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பைக்கை கீழே சாய்த்து பாம்பை வெளியே துரத்தினர். ஒரு அடி நீள நல்ல பாம்பு படமெடுத்து சீறியது. அதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பின், அங்கிருந்த ஒருவர் குச்சி மூலம் பாம்பை பிடித்து, ஒரு பாட்டிலில் அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X