நிதி மோசடி ஜாமின் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிதி மோசடி ஜாமின் மனு

Added : செப் 04, 2021
Share
மதுரை:கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான இருவர், ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன். கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தினர். வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். ஹெலிகாப்டர் வைத்துள்ளனர்.'நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும்' என அறிவித்து,

மதுரை:கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான இருவர், ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன். கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தினர். வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். ஹெலிகாப்டர் வைத்துள்ளனர்.'நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும்' என அறிவித்து, மக்களிடம் வசூலித்தனர்.

தொகையை தராமல் ஏமாற்றியதாக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சகோதரர்கள், கணேஷ் மனைவி உட்பட பலரை கைது செய்தனர்.கணேஷ் மனைவி அகிலாண்டம் மற்றும் வெங்கடேசன், 'எப்.ஐ.ஆரில் எங்கள் பெயர் இல்லை. நிறுவனத்திற்கும், எங்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.

நீதிபதி பி.புகழேந்தி, ''இந்நிறுவனம் மீது வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதா, எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, மோசடி தொகை எவ்வளவு என போலீஸ் தரப்பில் செப்., 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X