புதுச்சேரி-'புதுச்சேரியில் வழக்கறிஞர் சேம நல நிதி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசினார்.சட்டசபையில் அவர், பேசியதாவது;தமிழகத்தில் ஒரு வழக்கறிஞர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்திற்கு சேமநல நிதியாக 10 லட்சம் வரை அரசு வழங்குகிறது. புதுச்சேரியில் இதற்கான ஒரு சட்ட வரைவு சரியாக இல்லாததால், சேமநல திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உள்ளது.புதுச்சேரி வழக்கறிஞர் நல நிதி திட்டம் ஏற்கனவே உள்ளது. அதற்கு கார்ப்பஸ் பண்ட் என்று ஒரு கணிசமான தொகையை உருவாக்கி, அத்திட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வந்தால், தமிழகத்திற்கு ஈடாக புதுச்சேரி வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கும் சேமநல நிதி கிடைக்கும்.சென்னை ஐகோர்ட்டில் நமது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நீதிபதி பதவிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சென்று விட்டது. இது வரும் காலங்களில் தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமன்றத்தில் உள்ள 1 மற்றும் 2 ரூபாய் ஸ்டாம்புகள் தட்டுப்பாட்டை போக்க அரசு வழிவகுக்க வேண்டும். நீதிமன்றத்தில் மூன்றாவது தளம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டுக்கு வரவில்லை. புதிய நீதிமன்றத்திற்கு தேவையான ஊழியர்களை நியமித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE