புதுச்சேரி-சட்டசபை மானியக்கோரிக்கையில், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் பேசியதாவது:கிரும்மாம்பாக்கத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய மனைப்பட்டாவை கேன்சல் செய்துவிட்டு, அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி உத்திரவின் பேரில், மல்டி காம்ப்ளக்ஸ் கட்டி வருகின்றனர்.
அரசு அவர்களுக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும். என் தொகுதியில் குடிமை பொருள் வழங்கும் துறை துணை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதை தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்திற்கு மாற்றிவிட்டனர். பழையபடி எனது தொகுதிக்கு கொண்டு வர வேண்டும். கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். பனித்திட்ட கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். மீன் வலைகளை உலர்த்த ெஷட் அமைத்து தர வேண்டும்.ஏம்பலம் தொகுதி, அரங்கனுார் கிராமத்திற்கு போதிய வசதி செய்து தர வேண்டும். அனைத்து கிராமங்களிலும் ைஹமாஸ் விளக்குகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.கோர்க்காடு கிராமத்திற்கு சமுதாயக்கூடம் மற்றும் நுாலகம் அமைத்து தர வேண்டும். தொகுதி முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். ஏம்பலம் தொகுதி மக்களின் அடிப்படையான வாழ்வாதார திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE