புதுச்சேரி-சட்டசபையில், மானிய கோரிக்கை விவாதத்தின் போது சுயே., எம்.எல்.ஏ., அங்காளன் பேசியதாவது;9 கொம்யூன் பஞ்சாயத்தில் கூடுதல் குப்பை வண்டிகள் தேவை. தினசரி குப்பைகளை வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சகடுப்பட்டு கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.சாலையின் இருபுறம் உள்ள வாய்க்கால் முறைப்படுத்தி கட்டித்தர வேண்டும்.
அங்கு மேல்நிலை தொட்டி, அமைத்த தர வேண்டும். தொகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் உள்ள ஜெனரேட்டர்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பழைய டேங்குகளை அப்புறப்படுத்தி, கிராமங்களில் உள்ள குளங்களை துார் வார வேண்டும். எனது தொகுதியில் உள்ள சுடுகாடுகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.மதகடிப்பட்டு கருணாநிதி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும்.
அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் சுற்று சுவர் அமைத்து தர வேண்டும். மதகடிப்பட்டு காமராஜர் கலை கல்லுாரியில் முதுகலை படிப்பு கொண்டு வர வேண்டும்.பள்ளிகள், சமுதாய கூடங்களில் வாட்ச்மேன் போட வேண்டும். பிப்டிக் மூலம் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர வேணடும். விளையாட்டு வாரியம் அமைக்க வேண்டும். தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைத்து தர வேண்டும். விவசாயிகளின் நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.