போலீஸ் செய்திகள் தொடர்ச்சி...

Added : செப் 04, 2021
Share
Advertisement
ரூ.2.60 லட்சம் திருட்டுகொட்டாம்பட்டி: எம்.புதூர் விவசாயி அழகு 58, யூனியன் வங்கியில் தன்னுடைய மற்றும் மருமகள் முத்தழகி கணக்கில் ரூ.3 லட்சம் எடுத்தார். இதில் ஜவுளி வாங்க ரூ. 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு மீதி பணத்தை டூவீலர் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு ஜவுளி கடைக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியிலிருந்த பணத்தை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மீது

ரூ.2.60 லட்சம் திருட்டு
கொட்டாம்பட்டி: எம்.புதூர் விவசாயி அழகு 58, யூனியன் வங்கியில் தன்னுடைய மற்றும் மருமகள் முத்தழகி கணக்கில் ரூ.3 லட்சம் எடுத்தார். இதில் ஜவுளி வாங்க ரூ. 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு மீதி பணத்தை டூவீலர் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு ஜவுளி கடைக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியிலிருந்த பணத்தை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மீது கார் மோதல்:

ராணுவ வீரர் பலி திருமங்கலம்: சோனை மீனாநகர் சீனிவாசன் 48, ராணுவ வீரர். இவர் ஜம்மு காஷ்மீரில் வேலை செய்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். விடுமுறைக்கு வந்தவர் இரு நாட்களில் ஜம்மு காஷ்மீர் புறப்பட இருந்தார். தந்தை சண்முகம் அறுவைசிகிச்சைக்காக விருதுநகர் சென்று காரில் திரும்பினார். மேலக்கோட்டை அருகே முன்பக்க டயர்கள் வெடித்து திருநெல்வேலிக்கு டயர்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. சீனிவாசன் பலியானார். ஊமச்சிகுளம் லாரி டிரைவர் ராமலிங்கத்தின் கால் முறிந்தது. காரில் சிக்கிய சீனிவாசன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
டூவீலரில் இருந்த நகை திருட்டு
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ரவிச்சந்திரன் 40, மும்பையில் இட்லி வியாபாரம் செய்கிறார். இந்தியன் வங்கி லாக்கரில் இருந்த 10 பவுன் நகையை எடுத்தவர் கருங்காலக்குடி மெயின் ரோட்டில் டூவீலரில் வைத்து பூட்டிவிட்டு டீ சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது நகை திருடு போயிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.

வடமாநில தொழிலாளி தற்கொலை
அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி மலை அடிவாரத்தில் கிரஷர் அமைக்கும் பணி நடக்கிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த முன்னப் குமார் 32, காவலாளியாக வேலை செய்தார். செப்., 2 இரவு தங்கியிருந்த கண்டெய்னர் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கடைகளை உடைத்து கம்ப்யூட்டர் திருடியவர் கைது
உசிலம்பட்டி: பேரையூர் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ, மதுரை ரோட்டில் அலைபேசி கடை உள்ளிட்ட 4 கடைகளை உடைத்து கம்ப்யூட்டர், கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. இதுகுறித்து போலீஸ் விசாரணையில் நாகமலைபுதுக்கோட்டை செந்தில்குமார் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கம்ப்யூட்டர்கள், கேமரா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

22 கிலோ கஞ்சா; ஒருவர் கைது
உசிலம்பட்டி: இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், எஸ்.ஐ., சேகர் மற்றும் போலீசார் கருக்கட்டான்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் கஞ்சா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். பாண்டியராஜன் 44, வீட்டின் முன் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X