புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Added : செப் 04, 2021
Share
புதுச்சேரி-சட்டசபை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு நிதியை குறைவாக கொடுக்கிறது. எனவே, புதுச்சேரியை மத்திய நிதிக் குழுவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய நிதிக் குழுவில் இருக்கும் மாநிலங்களுக்கு 41 சதவீதம் நிதி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு புதுச்சேரிக்கு 20 சதவீத

புதுச்சேரி-சட்டசபை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு நிதியை குறைவாக கொடுக்கிறது. எனவே, புதுச்சேரியை மத்திய நிதிக் குழுவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய நிதிக் குழுவில் இருக்கும் மாநிலங்களுக்கு 41 சதவீதம் நிதி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு புதுச்சேரிக்கு 20 சதவீத நிதியை மட்டுமே வழங்குகிறது. இதனால் நமக்கு நிதிபற்றாக்குறை ஏற்படுகிறது.மத்திய அரசு பாகூர் மற்றும் காரைக்காலில் ைஹட்ரோ கார்பன் எடுக்க அறிவித்துள்ளது. அரசு இது தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். 'நீட்' தேர்விலிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு விளக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசுக்கு உள்ள 11 ஆயிரத்து 19 கோடி ரூபாய் கடனை மத்திய அரசிடம் கூறி தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர், பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X