பொது செய்தி

இந்தியா

கேசினோ நடத்த அனுமதி வேண்டும்

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசிய தாவது:காமராஜ் நகர் தொகுதியில் பெரிய வாய்க்காலின் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இ.சி.ஆரில் இணைப்பு சாலை அமைத்தபோது அப்பகுதியில் இருந்த 11 வீடுகள் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.பட்டா வழங்கிய இடத்தில் இடமே இல்லை. அவர்கள் வாடகை வீட்டில்

புதுச்சேரி-சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசிய தாவது:காமராஜ் நகர் தொகுதியில் பெரிய வாய்க்காலின் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இ.சி.ஆரில் இணைப்பு சாலை அமைத்தபோது அப்பகுதியில் இருந்த 11 வீடுகள் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.பட்டா வழங்கிய இடத்தில் இடமே இல்லை. அவர்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். அதற்கு பதில் 20 ரூபாய் பெற்றுக்கொண்டு தரமான முக கவசம் வழங்க வேண்டும்.சுதந்திர பொன் விழா நகரில் 34 லட்சத்து 57 ஆயிரத்தில் வீடுகள் விற்றனர். தற்போது கூடுதலாக 18 லட்சம் ரூபாய் செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.சூரிய ஒளி மின் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் கேசினோ கொண்டுவர வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.கோவாவில் இரண்டு விமானங்கள் தான் இயங்கி வந்தன. தற்போது ஒரு நாளைக்கு 200 விமானங்கள் இயங்குகின்றன. சுற்றுலா நகரமாக கோவா மாறியதே இதற்கு காரணம்.புதுச்சேரியில் சுற்றுலா மூலம் தான் வருவாய் கிடைக்கும். கேசினோவில் உள்ளூர் மக்கள் செல்ல முடியாதபடி, பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள், ஜி.எஸ்.டி., கட்டுவோர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X