பொது செய்தி

இந்தியா

மூலிகை தாவரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-வீடுகளில் வளர்க்க மூலிகை தாவரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் 75 லட்சம் மூலிகை தாவரங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 7,500 ெஹக்டர் பரப்பளவில் மூலிகை வளர்ப்பும் செய்யப்பட உள்ளது. அத்துடன் மக்களை தேடி ஆயுஷ் மருத்துவம் என்ற தலைப்பில் இலவச மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதுச்சேரி அரசு

புதுச்சேரி-வீடுகளில் வளர்க்க மூலிகை தாவரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் 75 லட்சம் மூலிகை தாவரங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 7,500 ெஹக்டர் பரப்பளவில் மூலிகை வளர்ப்பும் செய்யப்பட உள்ளது. அத்துடன் மக்களை தேடி ஆயுஷ் மருத்துவம் என்ற தலைப்பில் இலவச மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதுச்சேரி அரசு மூலிகை தாவரங்கள் வாரியம் சார்பில், ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி ஆயுஷ் மருத்துவம் நிகழ்ச்சி நடந்தது.மாநில மூலிகை தாவரங்கள் வாரிய நோடல் அதிகாரி ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். பொது சுகாதார துணை இயக்குனர் முரளி, மூலிகை தாவரங்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வீடுகளில் வளர்க்க மூலிகை தாவரங்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மூலிகை தாவரங்களின் சிறப்புகள், குணமாக்கும் நோய்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சித்தா மருத்துவர் ராஜலட்சுமி, மருத்துவ அதிகாரி குணசேகரன், தன்னார்வலர் அற்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X