வில்லியனுாரில் புதிய பஸ் நிலையம்: எதிர்கட்சி தலைவர் சிவா கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வில்லியனுாரில் புதிய பஸ் நிலையம்: எதிர்கட்சி தலைவர் சிவா கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
புதுச்சேரி-சட்டசபையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது: எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த வளர்ச்சி மற்றும் பிரச்னைகள் குறித்த கருத்துக்களுக்கு அமைச்சர்கள் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் தர வேண்டும். தற்போதைய சட்டசபை வளாகம், பழைய மகளிர் மருத்துவமனை, கிளப் ஆகிய இடங்களை சேர்த்து புதிய சட்டசபை வளாகம்

புதுச்சேரி-சட்டசபையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது: எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த வளர்ச்சி மற்றும் பிரச்னைகள் குறித்த கருத்துக்களுக்கு அமைச்சர்கள் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் தர வேண்டும். தற்போதைய சட்டசபை வளாகம், பழைய மகளிர் மருத்துவமனை, கிளப் ஆகிய இடங்களை சேர்த்து புதிய சட்டசபை வளாகம் கட்டலாம்.லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஆட்சியில் மூடப்பட்டது. தற்போது அந்த மில்லிற்கு ரூ.40 கோடி நிதி தொழிலாளர்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அந்த மில்லை இயக்கினால் விவசாயிகள், தொழிலாளர்கள் பயன்பெறுவர். விவசாயிகள் பாக்கித் தொகை ரூ.12.5 கோடியை உடனே வழங்க வேண்டும். நல்ல முடிவு எடுத்து மில்லை நடத்த வேண்டும்.கால்நடை மருத்துவ கல்லுாரியில் மருந்துகள், ஊசிகள் இல்லை. மாடுகளுக்கு தடுப்பூசி போடவில்லை. மானிய விலையில் தீவனம் வழங்கப்படுவதில்லை. கால்நடைத்துறைக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.12 கோடி குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி சம்பளம் கொடுக்கத்தான் போதுமானதாக இருக்கும். 4 ஆயிரம் மாடுகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்திருப்பது பெரிய விஷயம். கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள் பயிர்க் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடிக்குப் பதில் 5 சவரன் வரை நகைக்கடனை விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யுங்கள்.வில்லியனுார் ஆயுஷ்மான் மருத்துவமனை, ஏனாம் பொறியியல் கல்லூரி கட்ட 100 சதவீதம் நிதி பெற்று பணிகளை முடியுங்கள். புதிய மனை வாங்கும்போது வளர்ச்சி நிதி அதிகம் வாங்கப்பட்டும், அந்த மனை பிரிவில் எந்த வளர்ச்சியும் செய்வதில்லை. வளர்ச்சி நிதிக்கு தனி கணக்கு துவங்க வேண்டும். மத்திய அரசின் நிதி உதவி 70 சதவீதத்தில் இருந்து 40 ஆக குறைந்தது. கடந்த ஆட்சியில் 23 ஆக மாறியது. தற்போது 16 சதவீதம் மட்டுமே தரப்படுகிறது. அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். தகவல் தொழில்நுட்ப பூங்காவை கொண்டுவர வேண்டும். ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, சுற்றுலா கைடுகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசு சம்பளம் மற்றும் கருவிகளை வழங்குவதாக 163 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள அனுமதி அளித்தது. இன்னும் நியமிக்கவில்லை.பெண்களுக்கு இலவச பேருந்து விட வேண்டும். புதுச்சேரியில் உள்ள கார்ப்ரேஷன்களை மூட வேண்டும் என்பதற்காக விஜயன் கமிட்டி பரிந்துரை பெறப்பட்டது. பொருளாதார நிபுணர்களை கொண்டு குழு அமைத்து கார்ப்ரேஷன்களை மீண்டும் இயக்க வேண்டும்.தனியார் மருத்துவ கல்லுாரிகள் அரசு பரிந்துரைத்த கொரோனா நோயாளிகளை 2, 3 நாட்கள் மட்டுமே அனுமதித்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பலர் உயிரிழந்தனர். ஆனால், 9 நாட்கள் சிகிச்சை அளித்ததாக அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளன. இது குறித்து விசாரிக்க வேண்டும். கதிர்காமம் மருத்துவ கல்லுாரி, கொரோனா சிகிச்சை மையமாக தொடர்ந்து செயல்பட வேண்டும். கோவில் சொத்துக்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். திருக்காமீஸ்வரர் கோவில்வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ஆலய திருப்பணி மற்றும் தேர் பணியை முடியுங்கள். அக்கோவிலின் வைரம் உள்ளிட்ட விலைமதிப்பில்லாத நகைகள் வங்கியில் உள்ளது. அதை ஆவணப்படுத்துங்கள். வில்லியனுாரில் அம்மாசத்திரத்தில் 18 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. அங்கு, பஸ் நிலையம், விளையாட்டு திடல், போக்குவரத்து துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்த கட்டடம் அமையுங்கள். இவ்வாறு அவர், பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X