பொது செய்தி

இந்தியா

சட்டசபை ஒத்தி வைப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபையை கால வரையரையின்றி ஒத்தி வைத்து துணை சபாநாயகர் அறிவித்தார்.புதுச்சேரியின் 15வது சட்டசபையின், முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26ம் தேதி கூடியது. அன்று காலை கவர்னர் உரையும், மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.கடந்த 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின்

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபையை கால வரையரையின்றி ஒத்தி வைத்து துணை சபாநாயகர் அறிவித்தார்.புதுச்சேரியின் 15வது சட்டசபையின், முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26ம் தேதி கூடியது. அன்று காலை கவர்னர் உரையும், மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.கடந்த 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்தார். 1ம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று காலை 9:30 மணிக்கு சபை கூடியது. சபாநாயகர் செல்வம் கூட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.நேற்று மாலை துறை அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பதில் அளித்தனர். அதனையேற்று எதிர்கட்சியினர் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தை திரும்பப் பெற்றனர். அதனையொட்டி, அனைத்து மசோதாக்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து சபையை நடத்திய துணை சபாநாயகர் ராஜவேலு பேசுகையில், 'மானியக் கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்கள், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, காலிப் பணியிடம் நிரப்புதல், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்கு உரியது.இன்றுடன் சட்டசபை அலுவல் பணி முடிவுற்றதையொட்டி, சபை கால வரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X