பொது செய்தி

இந்தியா

ரத்து: *புதுச்சேரியில் குப்பை, தண்ணீர் வரி...*ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் *தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும் *சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி; குடிநீர் வரி ரத்து செய்யப்படும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்படும். அங்கு பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்' என முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர் ரங்கசாமி
 ரத்து: *புதுச்சேரியில் குப்பை, தண்ணீர் வரி...*ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் *தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும் *சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி-'கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி; குடிநீர் வரி ரத்து செய்யப்படும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்படும். அங்கு பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்' என முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:மாநில வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துக்களையும் எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர்களும் சிறப்பாக பதில் அளித்துள்ளனர். அனைத்து துறைகளிலும் நிறைய அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகள் அனைத்தும், இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.l மக்கள் தொகைக்கு ஏற்ப தாலுகாக்கள் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எளிதில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.l கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும்.l ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து வழங்கப்படும். கிருமாம்பாக்கத்தில் 214 பேருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாக்கள் கடந்த ஆட்சியில் பழிவாங்கும் நோக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அது, அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.l எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து ஆலோசித்து புதிய சட்டசபை கட்டப்படும்.l மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.l கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து செய்யப்படும். வணிக நிறுவனங்களுக்கான வரி தொடரும்.l கடந்த ஆட்சியில் போடப்பட்ட குடிநீர் வரி ரத்து செய்யப்படும். வணிக பயன்பாட்டிற்கு ரூ.3ல் இருந்து 9 ஆக உயர்த்தியதை ரூ.5 ஆக குறைக்கப்படும்.l தெருவிளக்குகளை இயக்க நகராட்சியில் தடையில்லா சான்றிதழ் பெற சிரமமாக உள்ளது. எனவே, நகராட்சியில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறும் நடைமுறை நீக்கப்படுகிறது. மின்துறை தெருவிளக்குகள் அமைக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி பெற வேண்டியதில்லை.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கி ரூ.205 கோடியை அரசே செலுத்தும். அதேபோன்று, அரசின் பிற துறைகள், மின்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ.250 கோடியை அரசே செலுத்தும்.l அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 'சி.டி.சி.,' அடிப்படையில் இல்லாமல் 'அடாக்' முறையில் வழங்கப்படும்.

l கோவில் நிலங்களை கிரயம் செய்து கொடுக்க முடியாது. கோவில் சிறப்பு அதிகாரி (அ) அறங்காவல் குழு அனுமதி கடிதம் கொடுத்தால், கல்வீடு கட்ட உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.l ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் ரூ. 3,000 உயர்த்தப்படும்.l வணிகர் நல வாரியத்திற்கு ரூ.2 கோடி நிதி வழங்கப்படும்.l அமைச்சரவை அலுவலக ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தி நிரந்தரம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.l போலி பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் அளிப்பது குறித்து சட்டத்துறை மற்றும் பதிவுத்துறையினருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.l மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

அங்கு பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்.l கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5ல் இருந்து 9 ஆக உயர்த்தப்படும்.l பாண்லேவில் பாதி ஊழியர்களை நிரந்தரம் செய்திட வாய்ப்பு உள்ளது. ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.l கூட்டுறவு நிறுவனங்களை சீரமைத்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு கைத்தறி நிறுவனங்களை நல்ல நிலைக்கு கொண்டு வரப்படும்.l புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் இயக்கப்பட்டு நல்ல நிலைக்கு வந்த பின் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்.l பாப்ஸ்கோ மூலம் இந்தாண்டு தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும்.l இந்திராகாந்தி பொது மருத்துவமனை மற்றும் ராஜிவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X