பி.எட்., தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.எட்., தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
புதுச்சேரி-பி.எட்.,தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளில் நேரடி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொது செயலாளர் திரிபுர சுந்தரி வெளியிட்டுள்ள அறிக்கை:பள்ளி கல்வித் துறையில் பி.எட்.,படித்தவர்களுக்கு நேரடி நியமனம் மூலம் அரசு

புதுச்சேரி-பி.எட்.,தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளில் நேரடி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொது செயலாளர் திரிபுர சுந்தரி வெளியிட்டுள்ள அறிக்கை:பள்ளி கல்வித் துறையில் பி.எட்.,படித்தவர்களுக்கு நேரடி நியமனம் மூலம் அரசு ஆசிரியர் பணி நிரப்பப்படவில்லை. இதேபோல் அரசு பள்ளிகளில் உள்ள டி.ஜி.டி., நேரடி நியமன ஆசிரியர் காலிபணியிடங்களை அவ்வப்போது நிரப்பவில்லை. இதனால் பி.ஏ., பி.எஸ்.சி., பி.எட்., முதுகலை பட்டம் பெற்று தமிழ்நாடு மற்றும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீண்ட நாட்களாக அரசு ஆசிரியர் பணி கிடைக்காமல் உள்ளது.புதுச்சேரி கல்வித் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களில், பி.எட்., முடித்த ஆசிரியர்களை கொண்டு நிரப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து வருகிறோம்.எங்களின் தகுதி,திறமையை கருத்தில் கொண்டு, பி.எட்., தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் வயது தளர்வு சலுகை அளித்து நிரப்ப வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X