பொது செய்தி

இந்தியா

மகளிருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க சிறப்பு முகாம்: அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'பெண்களின் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ்., சி.சி.டி.வி., கேமராவுடன் கூடிய நான்கு 'பிங்க்' நிற பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்தார். புதுச்சேரி பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியதாவது:● டிரைவிங் லைசென்ஸ் வழங்க மகளிருக்கு மட்டும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்

புதுச்சேரி-'பெண்களின் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ்., சி.சி.டி.வி., கேமராவுடன் கூடிய நான்கு 'பிங்க்' நிற பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்தார்.

புதுச்சேரி பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியதாவது:● டிரைவிங் லைசென்ஸ் வழங்க மகளிருக்கு மட்டும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.● பெண்கள் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ்., சி.சி.டி.வி., வசதியுடன் கூடிய நான்கு 'பிங்க்' நிற பஸ்கள் இயக்கப்படும்.● மத்திய அரசு திட்டத்தின் கீழ் 200 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது. மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் வாகன தர உறுதி ஆய்வு மையம் அமைக்கப்படும்.● புதுச்சேரி, காரைக்காலில் வட்டார ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். ● பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய பஸ்களில், ஜி.பி.எஸ், சி.சி.டி.வி வசதிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.● மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்க, சாலை வரியில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். ● ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பஸ்கள் இயக்கப்படும்.● கலை பண்பாட்டுத்துறை மூலம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.● ரோமன் ரோலண்ட் நுாலகம் விரிவாக்கம் செய்யப்படும்.● புதுச்சேரியில் நுாலக சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.● மறைந்த முன்னாள் முதல்வர் சண்முகம் சிலை காரைக்காலில் நிறுவப்படும். அவரது பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்படும். ● நீட், ஜே.இ.இ., ஐ.ஏ. எஸ்., தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க ஸ்மார்ட் பயிற்சி மையத்துடன் கூடிய அம்பேத்கர் மணிமண்டபம் காரைக்காலில் அமைக்கப்படும். ● அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரத்யேக எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். காரைக்கால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மாடல் கேரியர் சென்டர் துவக்கப்படும்.● புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆர்ட் கேலரி, கைவினை விற்பனை மையம் அமைக்கப்படும். ● தொழிற்சாலைகளில் பணியாளர் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்யப்படும். வீட்டு வசதி துறை மூலமாக குடியிருப்புகள் கட்ட புதிய இடங்கள் அடையாளம் காணப்படும். ● ஆதிதிராவிடர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.● புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது. பஸ்களை இயக்கி, நிதி நிலை சீரான பின்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டம் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர், கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X