பொது செய்தி

இந்தியா

புயல், மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: அமைச்சர் தேனீ ஜெயக்குமார் திட்டவட்டம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புயல் மற்றும் அதிக மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3.11 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.புதுச்சேரி சட்டசபையில் நேற்று விவசாயத்துறை மானிய கோரிக்கை மீது வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பதிலளித்து பேசியதாவது:புதுச்சேரியில் பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்கப்படுத்த

புதுச்சேரி-புயல் மற்றும் அதிக மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3.11 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.

புதுச்சேரி சட்டசபையில் நேற்று விவசாயத்துறை மானிய கோரிக்கை மீது வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பதிலளித்து பேசியதாவது:புதுச்சேரியில் பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் தை மாதத்தில் நெல் திருவிழா நடத்தப்படும். காய்கறிகளை வீட்டு மாடியில் பயிர் செய்வதை ஊக்கப்படுத்த 'என் வீடு என் நலம்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.இதில் 5,000 ரூபாய் மதிப்பிலான காய்கறி விதை அல்லது பழமரக்கன்றுகள் வழங்கப்படும்.காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தொன்னங்குடி அரிசி ஆலை, நெடுங்காடு கூட்டுறவு சங்கம், டி.ஆர்.பட்டினம், மதகடிபட்டு, கன்னியக்கோவில், கூனிச்சம்பட்டு ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.புயல் மற்றும் அதிக மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3.11 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.வருமானத்தை பெருக்கிட பாசிக் நிறுவனத்திற்கு நிதி உதவி. பாசிக் உழவரகங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் பங்களிப்புடன் 3,400 கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.ஆடு வளர்ப்பதற்கு 200 விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானிய விலையில் 10 பெண் ஆடுகள் மற்றும் ஒரு கிடா வழங்கப்படும்.

இந்தாண்டு எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி என்ற புதிய முதுகலை பட்டப் படிப்பு 20 இடங்களுடன் தொடங்கப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இணையாக 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்திரா காந்தி கால்நடை மருத்துவக்கல்லுாரியில் பயிற்சி பெறும் பயிற்சி கால்நடை மருத்துவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரியில் உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பார்வை திறன் குன்றிய பட்டதாரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பயணப்படி 100 ரூபாயிலிருந்து 300 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளியை, மாற்றுத்திறனாளி அல்லாதவர் திருமண செய்தால் வழங்கப்படும் திருமண உதவி தொகை 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஒரு மாற்றுத்திறனாளி மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்தால் வழங்கப்படும் திருமண உதவி தொகை 1.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.விதவைப் பெண் மறுமண நிதி உதவி 60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ரெயின்கோட் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X