பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை டூ மைசூருக்கு அரசு சொகுசு பஸ்

Added : செப் 04, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கர்நாடகா மைசூரு மடிகேரிக்கு (மெர்காரா) அரசு விரைவு சொகுசு பஸ் வசதி துவங்கப்பட்டுள்ளது.எஸ்.இ.டி.சி., உதவி மேலாளர் (இயக்கம்) சிவராமன் கூறியதாவது: பயணிகள் கோரிக்கைகளைஏற்று இவ்வசதி துவங்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்துதினமும் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30 மணிக்கு மடிகேரிக்கு செல்லும்.

மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கர்நாடகா மைசூரு மடிகேரிக்கு (மெர்காரா) அரசு விரைவு சொகுசு பஸ் வசதி துவங்கப்பட்டுள்ளது.
எஸ்.இ.டி.சி., உதவி மேலாளர் (இயக்கம்) சிவராமன் கூறியதாவது: பயணிகள் கோரிக்கைகளைஏற்று இவ்வசதி துவங்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்துதினமும் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30 மணிக்கு மடிகேரிக்கு செல்லும். மறுமார்க்கத்தில் மாலை 5:30 மணிக்கு மதுரை பஸ் இயக்கப்படுகிறது.

பயண நேரம் 13 மணி நேரம் 30 நிமிடங்கள். கட்டணம் ரூ.655.திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், சாம்ராஜ்நகர் மைசூரு ஆகிய இடங்களில் நின்று செல்லும். ஆன்லைன் முன்பதிவு வசதி உள்ளது. அரசு விரைவு பஸ் சேவை மற்றும் பயணிகள் புகார்களுக்கு 94450 17791 ல் தொடர்புகொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X