பொது செய்தி

இந்தியா

பா.ஜ., மேலிட  பார்வையாளர் புதுச்சேரிக்கு இன்று வருகை: ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு குறி

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா இன்று, புதுச்சேரிக்கு வருவதால், ராஜ்யசபா எம்.பி., பதவி யாருக்கு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் அடுத்த மாதம் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. எம்.பி., பதவியை கடந்த முறை அ.தி.மு.க.,விற்கு விட்டு

புதுச்சேரி-பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா இன்று, புதுச்சேரிக்கு வருவதால், ராஜ்யசபா எம்.பி., பதவி யாருக்கு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் அடுத்த மாதம் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. எம்.பி., பதவியை கடந்த முறை அ.தி.மு.க.,விற்கு விட்டு கொடுத்த என்.ஆர் காங்., இந்த முறை தனது வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறது.முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் எம்.பி., பதவியை பெற முனைப்பு காட்டி வருகிறார். அவருக்கு ரங்கசாமி ஆசிர்வாதம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயத்தில், கூட்டணி கட்சியான பா.ஜ.,வும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு குறி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக இன்று வருகிறார். ராஜ்யசபா எம்.பி., பதவியை என்.ஆர்.காங்., கட்சியிடமிருந்து கேட்டு பெறுவது சம்பந்தமாக பா.ஜ., நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்களை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பின், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.பா.ஜ., வின் கோரிக்கையை என்.ஆர்.காங்., ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X