பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல்குடி பஸ் ஸ்டாண்டா இது... வியக்கும் வெளியூர் வாசிகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக செயல்படாத நிலையில்,தற்போது குளியல் போடும் குட்டையாக மாறி உள்ளதை பார்க்கும் வெளியூர் வாசிகள் ,பந்தல்குடி பஸ் ஸ்டாண்டா இது என கேட்கும் நிலைக்கு மாறி உள்ளது.மதுரையிலிருந்து துாத்துக்குடி, திருச்செந்துார், எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உட்பட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள்,
 பந்தல்குடி பஸ் ஸ்டாண்டா இது... வியக்கும் வெளியூர்  வாசிகள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக செயல்படாத நிலையில்,தற்போது குளியல் போடும் குட்டையாக மாறி உள்ளதை பார்க்கும் வெளியூர் வாசிகள் ,பந்தல்குடி பஸ் ஸ்டாண்டா இது என கேட்கும் நிலைக்கு மாறி உள்ளது.

மதுரையிலிருந்து துாத்துக்குடி, திருச்செந்துார், எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உட்பட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பந்தல்குடி பஸ் ஸ்டாண்ட் சென்றுதான் செல்லும். அந்த வகையில் முக்கியமான சந்திப்பாக இருந்தது. நான்குவழிச்சாலை அமைக்கப்பட்ட பின் அனைத்து பஸ்களும் ஊருக்குள் வராமல் செல்கிறது. ஒருசில பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது.அதுவும் நாளடைவில் வருவதில்லை.

தற்போது டவுன் பஸ்கள் கூட பஸ் ஸ்டாண்ட் பக்கம் எட்டி பார்ப்பதில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் அனைத்தும் காலியாயின. பஸ் ஸ்டாண்டும் பராமரிப்பின்றி தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி போயின. தற்போது கிடங்குகளாக உள்ளதால் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி குளிக்கும் இடமாக மாறி உள்ளது. பஸ் ஸ்டாண்ட் எப்போதுதான் செயல்படும் என்ற ஏக்கத்தில் மக்களும் உள்ளனர்.ஊராட்சிதலைவர் பாலாஜி பத்ரிநாத்:

பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி நிதி இல்லாமல் செய்யமுடியவில்லை.தற்போது தேவையான நிதி வந்துள்ளதால் பஸ் ஸ்டாண்டை சீரமைத்து பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.அதன்பின் அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X