பெண்கள் பாதுகாப்புக்கு புதிய திட்டம்:உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண்கள் பாதுகாப்புக்கு புதிய திட்டம்:உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Added : செப் 04, 2021
Share
புதுச்சேரி-இரவு நேரத்தில் தனியாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் பெண்களை அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று விடும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: l ஐ.ஆர்.பி.என்.ல் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த 417 காவலர்கள், 14 ரேடியோ ஆப்ரேட்டர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு

புதுச்சேரி-இரவு நேரத்தில் தனியாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் பெண்களை அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று விடும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: l ஐ.ஆர்.பி.என்.ல் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த 417 காவலர்கள், 14 ரேடியோ ஆப்ரேட்டர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.l 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, காவலர்களுக்கு ஆண்டு சீருடை அலவன்ஸ் வழங்க ரூ. 7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலவன்ஸ் ஊர்காவல்படையினருக்கும் வழங்கப்படும். 32 காவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.l 390 காவலர், 12ரேடியோ டெக்னிஷியன், 29 டெக் ஹேண்ட்லர்ஸ் ஆகிய பணியிடங்கள் அடுத்த சில மாதங்களில் நிரப்பப்படும். l டி.ஜி.பி. அலுவலகம், சீனியர் எஸ்.பி. அலுவலகம், போலீஸ் குடியிருப்பு, லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டடம், காரைக்கால் சீனியர் எஸ்.பி. அலுவலகம், மாகி கடலோர காவல் நிலையம் கட்ட ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.l அனைத்து போலீஸ் நிலையத்திலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.l ஆயுதங்கள், தோட்டாக்கள் வாங்க ரூ. 1 கோடியும், ரோந்து செல்லும் கார் பைக் வாகனங்கள் வாங்க ரூ. 4 கோடியும், வி.வி.ஐ.பி., வருகையின்போது பயன்படுத்தும் குண்டு துளைக்காத வாகனம், ஜாமர் கருவி வாகனம் வாங்க ரூ. 2.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. l சைபர் க்ரைம் பிரிவுக்கு தேவையான சைபர் டூல்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வழங்கப்படும். சமூக வலைத்தளங்களில் பொய் மற்றும் அவதுாறு செய்திகளை பரப்பும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். l பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி நேரத்திற்குள், பணி முடித்து தனியாக செல்லும் பெண்கள், தனியாக வெளியே வந்த பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதினால், காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு 112 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டால், பெண் காவலருடன் செல்லும் வாகனம், அந்த பெண்ணை பாதுகாப்பாக அழைத்து சென்று அவரது முகவரியில் விட்டு விடுவர். இதற்காக தனியாக ஒரு நான்கு சக்கர வாகனம், பெண் காவலர் பணியில் இருப்பர்.l அனைத்து போலீஸ் நிலையத்திலும், பெண்களுக்கு என தனி கழிப்பறை வசதி செய்து தரப்படும். l தேவையான அனைத்து இடங்களிலும் கூடுதலாக போலீஸ் பூத், ஏற்கனவே உள்ள புறக்காவல் நிலையங்கள் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும். l போலீசார் ஸ்பாட் பைன் விதிப்பது, தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக தான். போலீசாருக்கு எந்தவித டார்கெட்டும் கொடுக்கப்படவில்லை. ஒரு சில போலீசார் செய்யும் செய்கையால், அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மேலும் அபராதம் விதிப்பது, பேரிடர் மேலாண்மை துறையின் உத்தரவு. எனவே, அது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X