கால்நடை உதவியாளர்கள் சம்பள உயர்வு கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை உதவியாளர்கள் சம்பள உயர்வு கோரிக்கை 

Added : செப் 04, 2021
Share
மதுரை : கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் பராமரிப்பு உதவியாளர்கள் 'சி கிரேடு' சம்பளம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பராமரிப்பு உதவியாளர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து 'சி கிரேடு' சம்பளம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. இன்றைய அமைச்சர்களிடம் மனு கொடுத்து, எடுத்துகூறியும் கண்டுகொள்ளாதது வேதனை. இலவச ஆடு, கால்நடை பாதுகாப்பு,

மதுரை : கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் பராமரிப்பு உதவியாளர்கள் 'சி கிரேடு' சம்பளம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பு உதவியாளர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து 'சி கிரேடு' சம்பளம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. இன்றைய அமைச்சர்களிடம் மனு கொடுத்து, எடுத்துகூறியும் கண்டுகொள்ளாதது வேதனை. இலவச ஆடு, கால்நடை பாதுகாப்பு, கோமாரி தடுப்பூசி என அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டும் பலனில்லை.

கால்நடை ஆய்வாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு, டாக்டர்களுக்கு இணையான சம்பள உயர்வு உரிய காலத்தில் வழங்கப்படுகிறது. உரிய சம்பளம், பதவி உயர்வு என பல கோரிக்கைகளை பல முறை முந்தைய, இன்றைய ஆட்சியாளர்களிடமும் கேட்டும் நடவடிக்கை இல்லை என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X