பொது செய்தி

தமிழ்நாடு

13 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது மதுரையில் நாளை வழங்கப்படுகிறது

Added : செப் 04, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் இவ்விருதுக்கு மாவட்டத்தில் 61 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான தேர்வுக் குழு மதிப்பீடு செய்து பட்டியல் கல்வி கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டோர் விவரம் நேற்று

மதுரை : மதுரையில் 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் இவ்விருதுக்கு மாவட்டத்தில் 61 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான தேர்வுக் குழு மதிப்பீடு செய்து பட்டியல் கல்வி கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டோர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது.

மதுரையில் விழா: வழக்கமாக சென்னையில் இவ்விருது வழங்கும் விழா நடத்தப்படும். இந்தாண்டு கொரோனா காரணமாக அந்தந்த மாவட்டத்தில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை (செப்.,5ல்) கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் சார்பில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை 13 பேருக்கும் சி.இ.ஓ., வழங்கினார். நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X