பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச கல்வி மத்திய அரசு திட்டத்தில் எஸ்.பி.கே., ஷத்திரிய பள்ளிகள் தேர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : நன்கு படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில், மத்தியரசானது விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பள்ளி ,விருதுநகர் ஷத்திரிய பள்ளியை தேர்வு செய்துள்ளது.நாட்டின் வளர்ச்சியில் முன்னேற விளையும் மாவட்டங்களாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு,இந்த மாவட்டங்களில்

அருப்புக்கோட்டை : நன்கு படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில், மத்தியரசானது விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பள்ளி ,விருதுநகர் ஷத்திரிய பள்ளியை தேர்வு செய்துள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் முன்னேற விளையும் மாவட்டங்களாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு,இந்த மாவட்டங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக நன்கு படிக்கும் எட்டாம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெறுவோரை மாவட்டத்தில் உள்ள தரமான பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்புவரை படிக்க கல்வி கட்டணம், விடுதி, உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி, மாணவிகளுக்கு விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியை மத்தியரசு தேர்வு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X