அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

Added : செப் 04, 2021
Share
மதுரை : மதுரையில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு உறுதித் தன்மை குறித்த ஆய்வு ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டது.பள்ளிகள் செப்.,1 முதல் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் 986 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்களின் பாதுகாப்பு உறுதித்தன்மை குறித்து வருவாய், போக்குவரத்து, கல்வி மற்றும் வட்டார போக்குவரத்து
 அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

மதுரை : மதுரையில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு உறுதித் தன்மை குறித்த ஆய்வு ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டது.

பள்ளிகள் செப்.,1 முதல் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் 986 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்களின் பாதுகாப்பு உறுதித்தன்மை குறித்து வருவாய், போக்குவரத்து, கல்வி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் கூட்டாய்வு கலெக்டர் அனீஷ் சேகர் தலைமையில் நடந்தது.எஸ்.பி., பாஸ்கரன், சி.இ.ஓ., சுவாமிநாதன், ஜே.டி.சி., பொன்செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செல்வம், சிங்காரவேலு, சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதல் நாளில் 100 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

வாகனங்களின் மஞ்சள் கலர், ஒளிரும் ஸ்டிக்கர், மாணவர்களுக்கு வசதியான படிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளனவா என 22 விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சில வாகனங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து வாகனங்களிலும் பொருத்த உத்தரவிடப்பட்டது.கலெக்டர் கூறுகையில், “சரியான வாகனங்களுக்கு ஆய்வு செய்ததற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. குறைபாடுள்ள வாகனங்களுக்கு நோட்டீஸ் அளித்து சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X