பொது செய்தி

தமிழ்நாடு

படிக்க முடியாது தவித்த சிறுவன் கலெக்டர் கருணையால் உதவிய பள்ளி நிர்வாகம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே குருணை குளத்தை சேர்ந்த மாணவன் வெற்றிவேல் 14, விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டிக்கு அனுப்பிய கடிதத்தில், எனது தாய், தந்தை இருவரும் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் 7ம் வகுப்பு படித்து வருவதாகவும் பாட்டியால் படிப்புக்கு செலவு செய்ய இயலாததால் மேற் படிப்பிற்கு உதவுமாறு குறிப்பிட்டிருந்தார்.இதை தொடர்ந்து மாணவனை 8ம்
 படிக்க முடியாது தவித்த சிறுவன்   கலெக்டர் கருணையால் உதவிய பள்ளி நிர்வாகம்

அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே குருணை குளத்தை சேர்ந்த மாணவன் வெற்றிவேல் 14, விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டிக்கு அனுப்பிய கடிதத்தில், எனது தாய், தந்தை இருவரும் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் 7ம் வகுப்பு படித்து வருவதாகவும் பாட்டியால் படிப்புக்கு செலவு செய்ய இயலாததால் மேற் படிப்பிற்கு உதவுமாறு குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து மாணவனை 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்த்தார். கலெக்டர் முயற்சியால், எஸ். பி.கே.. கல்வி குழும தலைவர் சுதாகர், செயலாளர் காசி முருகன், நிர்வாகத்தினர் மாணவனின் அனைத்து செலவுகளையும் ஏற்று கொள்வதாக கூறினர்.மாணவன் வெற்றிவேல், கலெக்டர், பள்ளி நிர்வாகம், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X