பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுவழி காணுங்க போலீஸ் ஸ்டேஷன்களில் பாழாகும் வாகனங்கள் காயலான் கடையில் விற்க கூட வழியில்லாது வீண்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. தகுந்த பாதுகாப்பின்றி அவைகள் துருப்பிடித்து வீணாகி வருவதற்கு மாற்று வழி காண வேண்டும்.மாவட்டத்தின் பல்வேறு பகுதி விபத்து , வழக்குகளின் பின்னணியில் டூ வீலர்கள், லாரி, டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பறிமுதல்

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தகுந்த பாதுகாப்பின்றி அவைகள் துருப்பிடித்து வீணாகி வருவதற்கு மாற்று வழி காண வேண்டும்.மாவட்டத்தின் பல்வேறு பகுதி விபத்து , வழக்குகளின் பின்னணியில் டூ வீலர்கள், லாரி, டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. வழக்குகள் முடிவடையாத நிலையில் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் வளாகங்களில் மாதக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன.

புத்தம் புதிதான வாகனங்களும் வழக்கு முடிந்த நிலையில் காயலான் கடைக்கு கூட கொண்டு செல்ல வழியில்லாத நிலைக்கு துருப்பிடித்து உருமாறி விடுகின்றன. போதையில் வாகனம் ஓட்டுதல், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களிடம் பறிமுதல் வானகங்கள் போன்றவைகளை கூட உடனுக்குடன் வழங்காமல் வீணாகும் நிலையை அடைகிறது. மணல் கடத்தலில் சிக்கும் டிராக்டர், லாரி போன்ற வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் நாளடைவில் செடிகள் வளர்ந்து அதன் புதர்களுக்குள் மறைந்து கிடக்கிறது. இடப்பற்றாக்குறை காரணமாக புதிய வாகனங்களும் ஒன்றின் மேல் ஒன்று என வைக்கப்பட்டு உபயோகிக்க முடியாத நிலைக்கு சென்று விடுகிறது.இது போன்ற வாகனங்களை மழை வெயில் போன்ற பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக வைக்க மாற்று வழி காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்

பாதுகாப்பு வேண்டும்லட்சக்கணக்கில் முதல் போட்டு வாங்கிய வாகனங்களை குவியலாக அடுக்கி வைத்துள்ளனர். அவை ஏலம் விடும் நடைமுறை வந்தாலும் இதன் நிலையை பார்த்து வாகன உரிமையாளர்களோ, எலம் எடுப்பவர்களோ அக்கறை காட்டுவதில்லை. இதே நிலை நீடித்தால் இந்த வாகனங்கள் யாருக்கும் உபயோகமின்றி கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி வருவதை தடுக்க முடியாது. பிரச்னை முடிந்து வாகனம் வெளியேறும் வரை வண்டி உரிமையாளர்களின் முயற்சியில் பாதுகாப்பாக வைப்பதற்கான வழிகளை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். தனசெல்வம், வங்கி ஊழியர்,ராஜபாளையம்....................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X