பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் ரோட்டில் நிற்கும் வாகனங்கள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; தூக்கத்தில் போலீசார்

Added : செப் 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கார் உள்ளிட்ட வாகனங்களை நெடுநேரம் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டு கொள்ளாதது வியப்பை ஏற்படுத்துகிறது.சர்வீஸ் ரோட்டில் மணிக்கணக்கில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் பிற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. திருமண
 சர்வீஸ் ரோட்டில் நிற்கும் வாகனங்கள்   ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; தூக்கத்தில் போலீசார்

விருதுநகர் : விருதுநகரில் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கார் உள்ளிட்ட வாகனங்களை நெடுநேரம் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டு கொள்ளாதது வியப்பை ஏற்படுத்துகிறது.சர்வீஸ் ரோட்டில் மணிக்கணக்கில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் பிற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. திருமண நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள், ஓட்டல் செல்பவர்கள், நெடுந்துாரம் பயணிக்கும் கனரக வாகனங்களும் சர்வீஸ் ரோடுகளில்தான் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இப்படி காலை முதல் இரவு வரை சர்வீஸ் ரோட்டில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி செல்வதால் டவுன் பஸ்கள், அத்தியாவசிய வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் செல்வதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. எதிரெதிர் வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்வதும் முடியாத காரியமாகிறது.சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் வரிசையாக பல மணி நேரம் நிறுத்தி செல்வதால் தெருக்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு ரோட்டில் வாகனங்கள் வருவதை காண முடியாது விபத்தில் சிக்கும் நிலையும் உருவாகிறது.

இரவில் அதிகளவில் கார்கள் நிற்பதால் பெண்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.இப்பகுதி பெரும்பாலும் இருள் சூழந்து உள்ளதால் விஷம செயல்களும் அரங்கேறுகிறது.ஆங்காங்கு வாகன சோதனையில் நேரத்தை செலவிடும் போலீசார் இதை கண்டு கொள்வதில்லை. இனியாவது இது போன்ற போலீசாரை சர்வீஸ் ரோடுகளில் ரோந்து பணியில் ஈடுபட செய்து ,ரோட்டில் நிற்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .எஸ்.பி.,யும் இதில் கவனம் கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X