நிவாரணம் வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
புவனகிரி-புவனகிரி தொகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க விதி 55 கவனஈர்ப்பு நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.தமிழக சபாநாயகரிடம் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் அளித்துள்ள மனுவில், புவனகிரி தொகுதி மருதூர் அருகே அம்பாள்புரம் மாரியம்மன் கோவில் தெரு கலைச்செல்வன், 30; முகையூர்

புவனகிரி-புவனகிரி தொகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க விதி 55 கவனஈர்ப்பு நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.தமிழக சபாநாயகரிடம் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் அளித்துள்ள மனுவில், புவனகிரி தொகுதி மருதூர் அருகே அம்பாள்புரம் மாரியம்மன் கோவில் தெரு கலைச்செல்வன், 30; முகையூர் பாலதண்டாயுதம், 54; ஆகியோர் தனித்தனியாக 2ம் தேதி மாலை வயலில் வேலை செய்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் மழையின் போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பாதித்த விவசாய குடும்பத்திற்கு விதி எண். 55ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X