பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் 54 காலி பதவிக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

Added : செப் 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : ஊராக உள்ளாட்சியில் 54 காலி பணியிடங்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.விருதுநகரில் நடந்த இதற்கான கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 2021 வரை காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு 1, ஊராட்சி ஒன்றிய வார்டு 3, ஊராட்சி தலைவர் 4, ஊராட்சி வார்டு உறுப்பினர் 46,

விருதுநகர் : ஊராக உள்ளாட்சியில் 54 காலி பணியிடங்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

விருதுநகரில் நடந்த இதற்கான கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 2021 வரை காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு 1, ஊராட்சி ஒன்றிய வார்டு 3, ஊராட்சி தலைவர் 4, ஊராட்சி வார்டு உறுப்பினர் 46, என 54 பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக 188 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்களது பெயர்களை ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டசபை வாக்காளர் பதிவு அலுவலரை அணுகி விண்ணப்பம் அளித்து பெயர்களை சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு சேர்த்தல், திருத்தல் பின் துணைப் பட்டியல் வெளியிடப்படும்.மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.எஸ்.பி.மனோகர், திட்ட இயக்குநர் திலகவதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரசேகரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X