பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 169 கஞ்சா குற்ற வழக்குகள் பதிந்து 265 பேர் கைது செய்து 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதுஇதற்காக, எஸ்.பி.,சக்தி

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 169 கஞ்சா குற்ற வழக்குகள் பதிந்து 265 பேர் கைது செய்து 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதுஇதற்காக, எஸ்.பி.,சக்தி கணேசன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடலுார், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 காவல் உட்கோட்டங்களில் தலா 1 இன்ஸ்பெக்டர், 1 சப் இன்ஸ்பெக்டர், 5 காவலர்கள் என மொத்தம் 49 பேர் தனிப்படையில் இடம் பெற்றுள்ளனர். தனிப்படையினர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் தனிக்கவனம் செலுத்தி கஞ்சா விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபடுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X