பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லுாரி செய்திகள் கல்லுாரிகளில் தடுப்பூசி முகாம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சிவகாசி:சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப் பணி திட்டம் ,ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கல்லுாரி வளாகத்தில் கல்லுாரி மாணவர்கள் ,ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சேகர் துவக்கி வைத்தார். டாக்டர் ராமலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்

சிவகாசி:சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப் பணி திட்டம் ,ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கல்லுாரி வளாகத்தில் கல்லுாரி மாணவர்கள் ,ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சேகர் துவக்கி வைத்தார். டாக்டர் ராமலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், அலுவலக மேலாளர் பாலகுருசாமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.*சிவகாசி: அரசு கலை, அறிவியில் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார். சப் கலெக்டர் பிரதிவிராஜ் துவக்கி வைத்தார். மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் ராஜேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் அரவிந்த்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

கல்லுாரி கணினி அறிவியல் துறை தலைவர் பாலாஜி, இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வீரச்செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேசமுருகன், விளையாட்டுத் துறை இயக்குநர் சாந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்

இணையவழியில் பயிற்சி
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி கிராமபுற தொழில்முனைவோர் , கவச்சிதா கிராமப்புற மேம்பாட்டு கழகம் ,சிவகாசி ஜூனியர் ஜேசியஸ் சங்கம் சார்பில் இணைய வழியில் மூலிகை நாப்கின் தயாரிக்கும் முறை பற்றிய பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் பொற்கொடி வரவேற்றார்.

முதுகலை வேதியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி மீனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு பயிற்சியாளர் மாரீஸ்வரி பயிற்சி அளித்தார். காளீஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளைஒருங்கிணைப்பாளர் சைலஜா, உதவி பேராசிரியர் விண்ணரசி, ஜூனியர் ஜேசியஸ் சங்கம் அவை தலைவர் அருண்சுனை செல்வி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X