பொது செய்தி

தமிழ்நாடு

சத்து மாத்திரை வழங்கப்படுமா; பள்ளி மாணவர்களின் பெற்றோர்

Added : செப் 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த மார்ச்சில் மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் (செப்.1) திறக்கப்பட்டது. தற்போது 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்

திண்டுக்கல் : கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த மார்ச்சில் மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் (செப்.1) திறக்கப்பட்டது. தற்போது 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் உள்ள மாணவர்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும்.

அதன் பின்னரே பாடம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் அக்டோபரில் கொரோனா 3வது அலை உச்சம் தொடும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்து வந்தாலும் 3 வது அலை குறித்து அச்சம் மாணவர்களை விட பெற்றோர்களுக்கு அதிகம் உள்ளது.மாணவர்கள் உடல் அளவில் பாதிக்கப்படுவதையும், தொற்று பரவலையும் தடுக்க வேண்டும்.

இதற்காக கடந்த ஜனவரியில் பள்ளிகளை திறக்கும் போது சுகாதாரத்துறை மூலம் மாணவர்களுக்கு வைட்டமின், இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அதே போல் இம்முறையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X