பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் காணை நோய் தடுப்பூசி பணி துவக்கம் 1350 கால்நடைகளுக்கு செலுத்த ஏற்பாடு

Added : செப் 04, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் கால்நடைத்துறை சார்பில் எல்லையோர கிராமங்களில் உள்ள 1350 பசு, எருமைகளுக்கு நோய் பரவலை தடுக்க வீடு தேடிச்சென்று காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாடுகள் உள்ளன.கால்நடைகளை கோமாரி எனும் காணை நோய் பாதித்தால் காய்ச்சல் ஏற்பட்டு தீவனம்


தேனி : தேனி மாவட்டத்தில் கால்நடைத்துறை சார்பில் எல்லையோர கிராமங்களில் உள்ள 1350 பசு, எருமைகளுக்கு நோய் பரவலை தடுக்க வீடு தேடிச்சென்று காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாடுகள் உள்ளன.கால்நடைகளை கோமாரி எனும் காணை நோய் பாதித்தால் காய்ச்சல் ஏற்பட்டு தீவனம் உட்கொள்ளாது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சினைப்பிடிப்பது தாமதம் ஆகும். இளம் கன்றுகள் இறக்கும். இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நோய் குளிர்காலத்தில் ஒரு மாட்டில் இருந்து மற்றொன்றுக்கு பரவும் தன்மை கொண்டது. மாவட்டத்தில் தற்போது சீதோஷ்ண நிலை மாறியுள்ளதால் காணை நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
10 கிராமங்களில் தடுப்பூசி
இதையடுத்து தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையால் தடுப்பு நடவடிக்கை துவங்கப்பட்டு கேரள எல்லையை ஒட்டியுள்ள நோயால் பாதிக்கப்படும் கிராமங்களை அடையாளம் கண்டுள்ளது. இதில் கேரளாவில் இருந்து போடி முந்தல், லோயர் கேம்ப், கம்பமெட்டு பகுதிகள் வழியாக கால்நடைகள் வருகிறதா என தீவிர கண்காணிப்பு செலுத்தப்படுகிறது. இதனை ஒட்டியுள்ள முந்தல், கொட்டக்குடி, ஊத்துக்காடு, நாயக்கர் தொழு, பளியனகுடி கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது. வீடுதேடிச்சென்று தடுப்பூசி செலுத்த 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஒரு கால்நடை உதவி டாக்டர், ஆய்வாளர், உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக செப்.10க்குள் 1350 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அடுத்த கட்டமாக மற்றவைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இப்பணிகளை மண்டல இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கணபதி மாறன் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X