மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள், வான் பறந்து செல்லும், இனி! கடல் கடந்து வந்த, அதிநவீனம்!| Dinamalar

தமிழ்நாடு

மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள், வான் பறந்து செல்லும், இனி! கடல் கடந்து வந்த, அதிநவீனம்!

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
திருப்பூர்:தைவான் நாட்டு பத்து அதிநவீன காலர் நிட்டிங் மெஷின்கள் நேற்று, திருப்பூர் வந்து சேர்ந்தன. அவை, நாரணாபுரத்தில் உள்ள நிட்டிங் பொது பயன்பாட்டு மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), பல்லடம் அருகே நாரணாபுரத்தில், நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது; 40 நிட்டிங் நிறுவனங்கள்
மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள், வான் பறந்து செல்லும், இனி!  கடல் கடந்து வந்த, அதிநவீனம்!

திருப்பூர்:தைவான் நாட்டு பத்து அதிநவீன காலர் நிட்டிங் மெஷின்கள் நேற்று, திருப்பூர் வந்து சேர்ந்தன. அவை, நாரணாபுரத்தில் உள்ள நிட்டிங் பொது பயன்பாட்டு மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), பல்லடம் அருகே நாரணாபுரத்தில், நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது; 40 நிட்டிங் நிறுவனங்கள் கரம்கோர்த்துள்ளன.15.35 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள இம்மையத்துக்கு, மத்திய அரசு, 8.35 கோடி ரூபாய்; தமிழக அரசு 3 கோடி ரூபாய் மானியம் வழங்குகின்றன.

நிட்டிங் துறையினர், 4 கோடி ரூபாய் முதலீடு செய்கின்றனர்.நிட்டிங் மெஷின் கூடம், தொழிலாளர் திறன் பயிற்சி மையம், ஒர்க்ஷாப் ஆகிய உள்கட்டமைப்புகளுடன், பொது பயன்பாட்டுமைய கட்டடம், 2019 இறுதியில் கட்டிமுடிக்கப்பட்டது. உடனடியாக, தமிழக அரசு, 1.60 கோடி ரூபாய் மானியம் வழங்கியது.மானியம் தாமதம்தொற்று பரவலால், மத்திய அரசு மானியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், வெளிநாடுகளில் இருந்து நிட்டிங் மெஷின்களை தருவிப்பது சிக்கலானது.

கடந்த மார்ச் மாதம், மத்திய அரசு, 2.21 கோடி ரூபாய் மானிய தொகையை விடுவித்தது. இதையடுத்து, திருப்பூர் நிட்டிங் துறையினர், மெஷின் இறக்குமதிக்கு ஆர்டர் வழங்கினர்.முதலாவதாக, தைவான் நாட்டிலிருந்து 10 அதிநவீன காலர் நிட்டிங் மெஷின்கள் இறக்குமதியாகியுள்ளன. கப்பலில், சென்னை துறைமுகம் வந்திறங்கிய மெஷின்கள், நேற்று, லாரிகளில் ஏற்றப்பட்டு, பொது பயன்பாட்டு மையத்துக்கு கொண்டுவரப்பட்டது. நிட்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ள மர பெட்டிகள், பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன.

வசமாகும் சர்வதேச சந்தை'சிம்கா' தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:திருப்பூரில் புதுவகை ஆடை தயாரிப்பை அதிகரிப்பதற்காக, மதிப்பு கூட்டு துணி உற்பத்தி செய்யும் நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 20 காலர் நிட்டிங் மெஷின்; 25 சர்க்குலர் நிட்டிங் மெஷின்கள் நிறுவப்பட உள்ளன. முதல்கட்டமாக, தைவானில் இருந்து 10 காலர் நிட்டிங் மெஷின்கள், வந்துசேர்ந்துள்ளன. தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் மெஷின்கள் விரைவில் பொருத்தப்பட்டு, துணி உற்பத்தி செய்து, வெள்ளோட்டம் பார்க்கப்படும்.

அடுத்த 15 நாட்களுக்குள் பொது பயன்பாட்டு மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.பின்னலாடை துறைக்கான நாட்டின் முதல் நிட்டிங் பொது பயன்பாட்டு மையம் என்ற சிறப்பை இம்மையம் பெறுகிறது. அதிநவீன மெஷினரிகளை பயன்படுத்தி, குறு, சிறு, நடுத்தர நிட்டிங் நிறுவனங்கள், மிக எளிதாக, மதிப்பு கூட்டப்பட்ட துணி ரகங்களை தயாரிக்க முடியும். புதுவகை ஆடை தயாரிப்பு மூலம், சர்வதேச வர்த்தக சந்தை, திருப்பூரின் வசமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X