தமிழ்நாடு

24,975 பள்ளி மாணவர்கள் எங்கே போனார்கள்? கண்டுபிடிக்க நடக்கிறது 'சர்வே'

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும்,24 ஆயிரத்து 975 பேர், இடைநிற்றல் தழுவியதால், இவர்களின் தற்போதைய நிலை குறித்து, சர்வே எடுக்கும் பணிகள், தீவிரமாக நடக்கின்றன.ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு மேற்கொள்வது வழக்கம். இவர்களை பள்ளிகளில் சேர்த்து, பிளஸ் 2 வரை, இடைநிற்றல் தழுவாமல் இருக்க கண்காணிக்கப்படும்.கொரோனா
  24,975 பள்ளி மாணவர்கள் எங்கே போனார்கள்? கண்டுபிடிக்க நடக்கிறது 'சர்வே'

கோவை;கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும்,24 ஆயிரத்து 975 பேர், இடைநிற்றல் தழுவியதால், இவர்களின் தற்போதைய நிலை குறித்து, சர்வே எடுக்கும் பணிகள், தீவிரமாக நடக்கின்றன.ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு மேற்கொள்வது வழக்கம்.

இவர்களை பள்ளிகளில் சேர்த்து, பிளஸ் 2 வரை, இடைநிற்றல் தழுவாமல் இருக்க கண்காணிக்கப்படும்.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், இடைநிற்றல் தழுவியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பழைய பள்ளியில் இருந்து, மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்கள், வேறு எந்த பள்ளிகளிலும் சேராமல் இருப்பது, பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்), இணையதளம் மூலம் தெரியவந்தது.இம்மாணவர்களின் தகவல்கள், எமிஸ் இணையதளத்தில் பதிவாகியிருப்பதால், இவர்களின் தற்போதைய நிலை குறித்து, சர்வே எடுக்கும் பணிகள் நடக்கின்றன.

கோவை மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இருந்து, 24 ஆயிரத்து 975 பேர் இடைநிற்றல் தழுவியுள்ளனர். இவர்களின் தற்போதைய நிலையை, நேரில் சென்று ஆய்வு செய்து, தகவல்களை பதிவேற்ற, 'சர்வே ஆப்' (survey app) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி, ஆசிரியர்களுக்கான பிரத்யேக இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

வட்டார வாரியாக, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, இம்மாணவர்களின் தகவல்களை இணையதளத்தில் இருந்து பெற்று, அவர்களின் தற்போதைய நிலையை, பதிவேற்றி வருகின்றனர்.

இடைநிற்றலுக்கு காரணம்!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''மாவட்டத்தில், பள்ளியில் இருந்து இடைநிற்றல் தழுவிய, 24 ஆயிரத்து 975 பேரில், 20 ஆயிரத்து 945 மாணவர்களின், தற்போதைய நிலை குறித்த தகவல்கள், சர்வே செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள், மற்றவர்களின் தகவல்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப படிப்புகளில் சேருவது, வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு இடம்பெயர்தல், இறப்பு உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், இடைநிற்றல் நடந்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பணிகள் முடிந்ததும் இடைநிற்றலுக்கான காரணத்தை கண்டறிந்து, அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க, வழிவகை செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-செப்-202106:34:15 IST Report Abuse
அப்புசாமி எத்தனை பேரிரண்டாம் அலையில் போனாங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X