பொது செய்தி

தமிழ்நாடு

இருதய துடிப்பு 'கன்னா பின்னா' :தக்க நேர சிகிச்சையால் கர்ப்பிணி நலம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், இருதய துடிப்பு அதிகமாக இருந்த நிறைமாத கர்ப்பிணி, அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளித்ததன் மூலம் காப்பாற்றப்பட்டார்.கோவை அன்னுாரை சேர்ந்தவர் 24 வயது பெண். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் திடீரென தலைசுற்றல் மற்றும் படபடப்பு அதிகமாக இருந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையின், மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை

கோவை:கோவையில், இருதய துடிப்பு அதிகமாக இருந்த நிறைமாத கர்ப்பிணி, அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளித்ததன் மூலம் காப்பாற்றப்பட்டார்.கோவை அன்னுாரை சேர்ந்தவர் 24 வயது பெண். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் திடீரென தலைசுற்றல் மற்றும் படபடப்பு அதிகமாக இருந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையின், மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், நிமிடத்திற்கு 60-70 முறை துடிக்க வேண்டிய இருதய துடிப்பு 200க்கும் மேல் துடிப்பது தெரியவந்தது. உடனடியாக அவர், இருதய வார்டுக்கு மாற்றப்பட்டார்.அங்கு டாக்டர்கள், பெண்ணுக்கு இ.சி.ஜி.,உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். அதில், அவருக்கு 'சுப்ரா வென்ட்ரிக்குலர் டேக்கிகாடியா' (எஸ்.வி.டி.,) என்ற இருதய துடிப்பு அதிகம் உள்ள நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நோயின் வீரியத்தை உடனடியாக கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளை, நரம்பு வழியாக செலுத்தியதன் மூலம், பெண்ணுக்கு இருதய துடிப்பு சீரான நிலைக்கு வந்தது. தொடர்ந்து, டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டதால், அவர் காப்பாற்றப்பட்டதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X