கிரிக்கெட் போட்டி: நேருநகர் சி.சி., வெற்றி

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:குரும்பபாளையம், 'தண்டர் பேர்டு' சி.சி., அணியின் சார்பில், காமராஜர் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, காளப்பட்டி 'ஏரோ சிட்டி' மைதானத்தில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நேருநகர் சி.சி., அணி, அரசூர் நியூ ஸ்டார் அணிகள் மோதின.முதலில் பேட் செய்த, நேருநகர் சி.சி., 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 145 ரன் எடுத்தனர். அணியில்

கோவை:குரும்பபாளையம், 'தண்டர் பேர்டு' சி.சி., அணியின் சார்பில், காமராஜர் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, காளப்பட்டி 'ஏரோ சிட்டி' மைதானத்தில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நேருநகர் சி.சி., அணி, அரசூர் நியூ ஸ்டார் அணிகள் மோதின.முதலில் பேட் செய்த, நேருநகர் சி.சி., 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 145 ரன் எடுத்தனர். அணியில் அதிகபட்சமாக வினோத்- 46 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய நியூ ஸ்டார் அணி, 12 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 84 ரன் மட்டுமே எடுத்து, 61 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.சிறப்பாக பந்து வீசிய சந்தோஷ்- 4 விக்கெட்களை கைப்பற்றினார். வெற்றி பெற்ற நேருநகர் சி.சி., அணிக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X