பொது செய்தி

தமிழ்நாடு

கிணத்துக்கடவில் 'கொசிமா' தொழில் பூங்கா! பணிகளுக்கு ஆயத்தம்; வேலைவாய்ப்பு பெருகும்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;கிணத்துக்கடவில், 42.42 ஏக்கர் பரப்பளவில், 'கொசிமா' தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான அங்கீகாரம் கிடைத்தவுடன், பணிகள் துவங்கவுள்ளன.கோவை, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கிரில், மோட்டார் பம்ப்செட் என பல்வேறு பொருட்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறது. இங்குள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.நகரில்

கோவை;கிணத்துக்கடவில், 42.42 ஏக்கர் பரப்பளவில், 'கொசிமா' தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான அங்கீகாரம் கிடைத்தவுடன், பணிகள் துவங்கவுள்ளன.கோவை, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கிரில், மோட்டார் பம்ப்செட் என பல்வேறு பொருட்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறது. இங்குள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.நகரில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடமின்மை உள்ளிட்ட காரணங்களால், குறுந்தொழிற்பேட்டைகள், ஜவுளிப்பூங்காக்கள் உள்ளிட்டவை, கோவை தொழில் துறையினரின் நீண்டாகால தேவையாக உள்ளது.இச்சூழலில், கோவை சிட்கோ தொழில் பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்(கொசிமா) உறுப்பினர்களுக்கென, தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்தது.கடந்த, 3.5 ஆண்டு காலம் முயற்சிகள் மேற்கொண்டு, கிணத்துக்கடவு சொலவம்பாளையத்தில், 42.42 ஏக்கர் பரப்பளவில் 'கொசிமா' தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.'கொசிமா' தலைவர் நல்லதம்பி கூறியதாவது:'கொசிமா'வில், 343 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பொள்ளாச்சி ரோடு 'சிட்கோ' வளாகத்தில் உறுப்பினர்களுக்கு, 230 யூனிட்கள் தொழில் செய்வதற்கு உள்ளன. இருப்பினும் தொழில் விரிவாக்க தேவைக்காக, உறுப்பினர்கள், 82 பேர் சேர்ந்து, கிணத்துக்கடவு சொலவம்பாளையத்தில், ஏக்கர் ஒரு கோடி என, 42.42 ஏக்கர் இடம் வாங்கியுள்ளோம்.இங்கு 'கொசிமா' தொழில் பூங்கா அமைக்கப்படும் என்பதால் தொழில் பெருகும்; வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். தமிழக அரசும் ரோடு, பாதாள சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு என அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக, 9.06 கோடி நிதி வழங்குவதாக, சட்டசபையில் அறிவித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இப்போதே 20 பேர் 'ரெடி''கொசிமா' தொழில் பூங்கா செயல் இயக்குனர் சுருளிவேல் கூறுகையில், ''இப்பூங்காவில் 78 தொழிற்சாலைகள் அமையவுள்ளன. தற்போது, உள்ளூர் திட்டக்குழுமத்திடம் கட்டுமான அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளோம். பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு அனுமதி கிடைத்தவுடன், கட்டுமான பணிகள் துவங்கப்படும். தற்போதே, 20 பேர் இங்கு தொழில் துவங்க தயாராக உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X